நீங்கள் தட்டச்சு செய்யப்போகும் தமிழ் எழுத்துருவின் வகைபாட்டினை முதலில் தெரிந்துகொண்டபின்பு, அவ்வகைபாட்டைச் சேர்ந்த குறிப்பிட்ட எழுத்துருவின் வழியாக உங்களது எழுத்துக்களை தட்டச்சு செய்யவும். பின்பு www.suratha.com எனும் இணையதளத்திற்குள் உள்ள பொங்குதமிழ் எனும் பகுதிக்குள் செல்லவும். அங்கு மேலே கீழே என செவ்வகம் வடிவிலான இரு கட்டங்கள் இடம்பெற்றிருக்கும். கட்டங்கள் ஒன்றிணையும் பகுதியின் நடுவே எழுத்துரு குடும்பங்களின் பெயர்களும் அதன் தொடுபுள்ளிகளும் இருக்கும். இப்போது நீங்கள் தட்டச்சு செய்த எழுத்துக்களை நகல் எடுத்து, மேல் கட்டத்திலே இடவும். அடுத்து, நடுவே உள்ள தொடுபுள்ளிகளில் நீங்கள் தட்டச்சு செய்த எழுத்துருவின் வகைபாட்டுப் பெயரின் அருகிலிருக்கும் தொடுபுள்ளியை அம்புக்குறியால் அழுத்தவும். உடனே கீழே உள்ள கட்டத்தில் நீங்கள் எழுதின எழுத்துருக்கள் தமிழின் யுனிகோட் வடிவில் தோன்றும். தமிழ் எழுத்துக்கள் வரவில்லையெனில், நீங்கள் அழுத்தின தொடுபுள்ளி தவறானது என்று அர்த்தம். சரியானதைத் தேர்ந்தெடுத்து அழுத்தினால் தமிழ் எழுத்துக்கள் தோற்றம்தரும். தமது எழுத்து வகைபாட்டை அறியாதோர் அனைத்துத் தொடுபுள்ளிகளையும் அழுத்தி சரியானதொன்றை தேர்ந்துகொள்ளலாம். பின்பு கீழ் கட்டத்திலிருக்கும் மாற்றப்பட்ட எழுத்துக்களை நகலெடுத்து, நீங்கள் விரும்பும் வலைபதிவிடங்களில் இட்டுக் கொள்ள, இப்போது வலைபதிவு யுனிகோட் முறையிலான தமிழில் தோற்றமளிக்கும். தக்க கணினித்திரையின் வாயிலாக உங்களது வலைபதிவினைக் காணும் எவரொருவரும் தமிழ் எழுத்துருவின் தேவையேதும் இன்றியே உங்களது பதிவுகளை வாசிக்கலாம்.
உலகெங்கிலுமுள்ள நண்பர்கள் ஒன்றுகூடி தமது கலை மற்றும் எண்ண வெளிப்பாடுகளை பரிமாற்றம் செய்துகொள்ள www.orkut.com எனும் இணையதளம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. உங்களது ஏதேனுமொரு மின்னஞ்சல் முகவரியை வைத்து ஓர்குட் தளத்தில் உங்களது வலையத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பின்பு, ஓர்குட் தளத்திற்கு சென்று தேடல் பகுதியில் விஸ்வாமித்திரன் எனும் பெயரை ஆங்கிலத்தில் இட்டுத் தேடினால் எனது வலையம் பார்வைக்கு வரும். அதில் கம்யூனிட்டி எனும் பிரிவில் உலக சினிமா எனும் பெயரில் ஒரு தமிழ்க் குழுமத்தை உருவாக்கியிருக்கிறேன். உலகளாவிய அளவில் நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழர்கள் அந்த குழுமத்தில் தம்மை இணைத்துக் கொண்டு தமது திரைப்பார்வைகளை முன்வைக்கலாம். சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளலாம். ஓர்குட் தளத்திலிருக்கும் உலக சினிமா தமிழ்க் குழுமத்தில் உங்களது எழுத்துக்களை தமிழில் பதிந்துகொள்ளவும் வலைபதிவை தமிழில் உருவாக்கிக் கொள்ளவும் தமிழ்மொழியை யுனிகோட் முறையில் எவ்விதம் வலைபதிவில் இடுவது என்பதை அடுத்த தகவல்குறிப்பில் எழுதுகிறேன்.


war times

my photographer
inner smile

own thinker