Pages

facebook twitter

.

    • முகப்பு
    • அறிமுகம்
    • சினிமா
    • இலக்கியம்
    • பயணம்
    • செவ்வகம்


    நிகழ்வும் சாரமும்

    விஸ்வாமித்திரன் எழுதி ‘புதிய பார்வை’ இதழில் வெளிவந்து, வாசகர்களின் பரவலான கவனிப்பையும் பாராட்டுதலையும் பெற்ற உலகத்தின் சிறந்த சிறுவர் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களடங்கிய ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை ‘வம்சி புக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 07.01.2008 அன்று, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள ‘வம்சி புக்ஸ்’ விற்பனை அங்காடியில் புத்தகத்தின் முதல்பிரதி வெளியிடப்பட்டது.

    இலங்கைத் திரைப்பட இயக்குநரும், சர்வதேச அளவில் இலங்கைத் திரைப்படங்களைக் கொண்டு சென்றதில் முக்கியமான படைப்பாளருமான பிரசன்ன விதானகே ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை வெளியிட, எழுத்தாளரும் ‘கல்லூரி’ திரைப்பட ஒளிப்பதிவாளருமான செழியன் பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குநர்கள் அம்ஜத் மீரா அகிலன், மாமல்லன், யுவராஜ் மற்றும் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


    புத்தகத்தை வெளியிட்டுப் பேசின திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே, “தமிழ்த் திரைப் படங்களில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றம் நிலவி வருகிறது எனவும், உலகத் திரைப் படங்கள் குறித்த பிரக்ஞை தமிழ் இளைஞர்களிடையே பரவி வருகிறது எனவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த மாற்றத்திற்கு விஸ்வாமித்திரன் போன்றோரின் திரைப்பட எழுத்துக்களும் முக்கியமான காரணம்” என்று குறிப்பிட்டார்.

    இந்நூல் குறித்து விஸ்வாமித்திரன் பேசும்போது, “உலகத் திரைப்படங்களை பரவலாக்குவதோடு மட்டுமில்லாமல், சிறுவர் வாழ்வியலைச் சித்திரிக்கும் படங்கள் குறித்து தமிழ்ப் பார்வை யாளர்கள் கொள்ளவேண்டிய கூர்ந்த கவனத்தை ஏற்படுத்துவன் நோக்கமே இந்த நூலை நான் எழுத காரணமாயிற்று என்றார். மேலும், ‘வம்சி புக்ஸ்’ மூலம் இந்த நூலை பதிப்பித்த எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்கள் எல்லா தரப்பினரையும் பாரபட்சமின்றி புத்தகம் சென்றடைய வேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் குறைந்த அடக்க விலையை நிர்ணயித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனவும் கூறினார்.

    விழா எளியமுறையில் நடந்தேறியது. ‘சிறுவர் சினிமா’ புத்தக வெளியீடு என்பதை பறைசாற்றும் வகையில் பள்ளிச் சிறுவர்களும் கலந்து கொண்டது விழாவை இன்னும் சிறக்கச் செய்தது.

    - விஜய் மகேந்திரன்

    நன்றி - ‘புதிய பார்வை’
    ஜனவரி (15-30) இதழ்
    Continue Reading








    புகைப்படங்கள்: ஷண்முக சுந்தரம்

    Continue Reading
    மதுரை நகரிலிருந்து வெளிவரும் ‘புதிய காற்று’ மாத இதழில், இந்த மாதத்திலிருந்து (பிப்ரவரி 2008) ‘மூன்றாம் சினிமா’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளேன். ‘மூன்றாம் சினிமா’ என்பது மூன்றாம் உலக நாடு களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களைக் குறிக்கும் பதம். மூன்றாம் உலக நாட்டவராகிய நமது முற்று முழுதான அடையாளங்களை சலனப்படுத்தும் மூன்றாமுலகத் திரைப்படங்கள் குறித்துப் பேசுவதே இந்தத் தொடரின் நோக்கம். தொடருக்கான முதல் படைப்பாக நான் எடுத்துக் கொண்டது ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள சாட் நாட்டுத் திரைப்படமான ‘உலர்பருவம்’ (Dry Season). தொடர்ந்து மூன்றாமுலகைச் சேர்ந்த நாடுகளின் திரைப்படங்கள் குறித்து இந்தத் தொடரில் எழுதுவேன்.

    இதழின் தொடர்பு முகவரி :

    புதிய காற்று,
    ஷிபா காம்ப்ளக்ஸ் முதல் மாடி,
    142, வடக்கு வெளி வீதி,
    யானைக்கல், மதுரை - 4371504,
    பேசி - 0452 4371504

    Continue Reading
    Newer
    Stories
    Older
    Stories

    மரம்

    • January 2014 (1)
    • December 2013 (4)
    • November 2008 (3)
    • October 2008 (2)
    • February 2008 (3)
    • September 2007 (5)

    இலை

    • அஞ்சலி
    • இத்தாலிய சினிமா
    • கதை
    • கவிதை
    • தமிழ்சினிமா

    கிளை

    recent posts

    Created with by BeautyTemplates and Infinyteam

    Back to top