ஓர்குட் - பரிமாற்றத்திற்கான இணையதளம்
September 20, 2007உலகெங்கிலுமுள்ள நண்பர்கள் ஒன்றுகூடி தமது கலை மற்றும் எண்ண வெளிப்பாடுகளை பரிமாற்றம் செய்துகொள்ள www.orkut.com எனும் இணையதளம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. உங்களது ஏதேனுமொரு மின்னஞ்சல் முகவரியை வைத்து ஓர்குட் தளத்தில் உங்களது வலையத்தை உருவாக்கிக் கொள்ளலாம். பின்பு, ஓர்குட் தளத்திற்கு சென்று தேடல் பகுதியில் விஸ்வாமித்திரன் எனும் பெயரை ஆங்கிலத்தில் இட்டுத் தேடினால் எனது வலையம் பார்வைக்கு வரும். அதில் கம்யூனிட்டி எனும் பிரிவில் உலக சினிமா எனும் பெயரில் ஒரு தமிழ்க் குழுமத்தை உருவாக்கியிருக்கிறேன். உலகளாவிய அளவில் நல்ல சினிமாவை நேசிக்கும் தமிழர்கள் அந்த குழுமத்தில் தம்மை இணைத்துக் கொண்டு தமது திரைப்பார்வைகளை முன்வைக்கலாம். சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளலாம். ஓர்குட் தளத்திலிருக்கும் உலக சினிமா தமிழ்க் குழுமத்தில் உங்களது எழுத்துக்களை தமிழில் பதிந்துகொள்ளவும் வலைபதிவை தமிழில் உருவாக்கிக் கொள்ளவும் தமிழ்மொழியை யுனிகோட் முறையில் எவ்விதம் வலைபதிவில் இடுவது என்பதை அடுத்த தகவல்குறிப்பில் எழுதுகிறேன்.
0 comments